பெண்களிடம் அத்துமீறும் கடை வியாபாரிகள்.. நடவடிக்கை எடுக்குமா கோவை போலீஸ்? வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 2:25 pm

கோவை பெரியகடை வீதியில் திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து பொருட்களை வாங்க நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை கட்டாயப்படுத்தி எங்கள் கடைக்கு வாருங்கள் வாங்குங்கள் என பெண்களிடம் அத்துமீரும் கடைதெரு ஊழியர்கள், சிலர் போதையில் பெண்களிடம், பொதுமக்களிடம் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் பெரியகடை வீதியில் பொதுமக்கள் சுதந்திரமாக தனக்குப் பிடித்த கடையில் சென்று பொருட்கள் வாங்க தடை செய்து அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைக்கப்படுமா ? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் சென்று பொருள்கள் வாங்க முடியும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!