ஒரு கொடிக் கம்பத்துக்கே கதறுறீங்க… 10 ஆயிரம் கொடி கம்பம் நடப் போகிறோம் : திமுகவுக்கு வேலூர் இப்ராஹிம் விடுத்த சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 6:23 pm

ஒரு கொடிக் கம்பத்துக்கே கதறுறீங்க… 10 ஆயிரம் கொடி கம்பம் நடப் போகிறோம் : திமுகவுக்கு வேலூர் இப்ராஹிம் விடுத்த சவால்!

மதுரை பி.பி குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. மனிதநேய மக்கள் கட்சி, தமமுக உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் தீவிரவாதத்தை ஊக்குவிக்க கூடிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்களுடன் இணைந்து திமுகவின் தூண்டுதலின் பெயரில் இஸ்லாமியர்கள், கொடி கம்பத்தை ஏற்ற விடாமல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்த கொடிக்கம்பத்தை அகற்றும் காவல்துறையினர் அதே பகுதியில் விசிக, திமுக கொடி இருப்பது காவல்துறையினர் கண்ணுக்கு தெரியவில்லையா.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களில் பாஜக கொடியை வைக்க கூடாது என காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கும் பகுதியில் எஸ்டிபிஐ போன்ற முஸ்லிம் கட்சி கொடியை இருக்கக் கூடாது என கூறுகின்றனரா.? இது மத வெறியை தூண்டிக் கூடிய விஷயமாக உள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் பாகிஸ்தான் சவுதி அரேபியாவில் கட்சி நடத்தி வருகின்றனரா? 85 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்ற இந்தியாவில் கட்சி நடத்தி வருகின்றனர்.

தேர்தல் வருகின்றது என்பதற்காக திமுக அரசு செய்யும் சதி செயல், இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவது, இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடக்கூடிய செயல்களை திமுக அரசு நிறுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம்.

அண்ணாமலை வீட்டின் அருகே கொடி கம்பம் ஏற்ற விடாமல் தடுத்த காரணத்தினால் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் 10 ஆயிரம் பிஜேபி கொடிக்கம்பங்கள் தமிழக முழுவதும் ஏற்றப்பட உள்ளோம் ஒவ்வொரு நாளும் 100 கோடி கம்பங்கள் இஸ்லாமியர் பகுதி உட்பட அனைத்து பகுதிகளும் ஏற்றப்பட உள்ளோம்.

முஸ்லிம் சிறைவாசி விடுவிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் கூறுவதை எதிர்க்கிறேன் இதற்கு முன்பு இந்து சிறைவாசி விடுதலை செய்யப்படுகிறோம் என கூறி உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

பாஜக பொருத்தவரை தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஹிந்து பேரறிவாளனாக இருந்தாலும், முஸ்லிம் பாட்ஷாவாக இருந்தாலும், நாளை கிறிஸ்துவமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதம் செய்தாலும் எதிர்ப்போம், எங்களுக்கு தேசம் தான் முக்கியம்.

திமுக உட்பட பிற கட்சியினர் தேர்தலுக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு மோதல் போக்கை ஏற்படுத்துகின்றனர் எனவே இதனை யாரும் இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!