கொடைக்கானலுக்கு போட்டாச்சு SHUTTER.. வனவிலங்குகள் புகுந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 11:53 am
Kodaikanal Closed -Updatenews360
Quick Share

கொடைக்கானல் மோயர்பாய்ன்ட் சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பைன் பாரஸ்ட், குணா குகை,பில்லர் ராக் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கலான மோபர் பாய்ண்ட் பகுதியில் நேற்று இரவு யானை கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி மோயர் பாய்ன்ட் சுற்றுலா தலத்தில் நுழைந்தது.

மேலும் அங்குள்ள கடைகளை உடைத்து சேதபடுத்தியது. இதில் 4 கடைகள் முற்றிலும் சேதமானது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டம் அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர்.

யானைகள் கூட்டமாக கூடியுள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட மாவட்ட வனஅலுவலர் திலீப் உத்திரவு பிறப்பித்துள்ளார். இதனால் சுற்றுலா தலங்களை காண வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Views: - 288

1

0