கொரோனாவுக்கு பலியான எஸ்.ஐ.! சல்யூட் அடித்து ஆனந்த கண்ணீர் வடித்த மனைவி!!

27 September 2020, 3:14 pm
Ambu SI Dead - Updatenews360
Quick Share

 திருப்பத்தூர் : ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்ற பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர்  சண்முகம். ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த இவர் 1993ல் காவல்துறையில் சேர்ந்து 27 ஆண்டுகளாக  பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல்  அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உடலுக்கு பாதுகாப்பு உடை அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுதபடி உணர்வுபூர்வமாக சல்யூட் அடித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

Views: - 14

0

0