காதல் திருமணம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு : பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்!!

6 May 2021, 4:01 pm
Love Couples - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள குப்பனூரை சேர்ந்த பகவதி குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபிரியா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடியினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் திருமணத்தை பதிவு செய்வதற்காக கோவை தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை வந்தனர். தொடர்ந்து தங்களது திருமணத்தை பதிவு செய்தனர். மதியம் 2 மணியளவில் அனைத்து வேலையும் முடிந்து, இவர்களை புகைப்படம் எடுக்க பத்திரப்பதிவாளர் மோகன் குமார் அழைத்துள்ளார்.

அப்போது திடீரென அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண் வீட்டார் பெண்ணை கடத்தி சென்றனர். மேலும் இதனை தடுக்க வந்த பகவதிகுமாரை அரிவாளால் வெட்டி, மிளகாய் பொடி தூவி சென்றதாக தெரிகிறது.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பகவதிகுமார் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 337

0

1