கட்டப்பஞ்சாயத்து பேச வந்த திமுக நிர்வாகி… ஏற்க மறுத்த சித்த மருத்துவர் மீது கொடூர தாக்குதல் : கிளினிக்கை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 5:56 pm

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப் உள்ளது. இதன் உரிமையாளர் சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மெடிக்கல் ஷாப்பில் நோயாளிகளை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நீண்ட நாளாக பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறனுக்கும், சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து இருதரப்பையும் பேச்சு வார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்த நிலையில் சண்முகம் தரப்பினர் திமுக வார்டு செயலாளர் பாபுவை அழைத்து வந்துள்ளனர்.

பாபு சண்முகத்திற்கு ஆதரவாக பேசிய நிலையில், அதை சித்த மருத்துவர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று கண்ணாடியை உடைத்து அதை தடுக்க வந்த மருத்துவரின் தாய் சாந்தி மற்றும் மருத்துவரையும் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சாந்தி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் சென்று கிளினிக்கை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!