சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது ஏன்..? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

20 August 2020, 4:42 pm
Quick Share

சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் நாளுக்கு நாள அதிகரித்து கொண்டே போகிறது. ஏராளமானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்த சூழலில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நோயாளியை குணப்படுத்த சித்த மருத்துவம் மிகுந்த பங்காற்றி வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படும் பட்சத்தில் நோயாளியை எவ்வித சிறமமும் இன்றி குணப்படுத்த சித்த மருந்துவம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இந்த சூழலில் இன்று, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த கொரோனா காலத்தில் நோயாளிகளை குணப்படுத்த சித்தமருத்துவம் மிகுந்த பங்காற்றி வருவதாக குறிபிட்ட நீதிபதி சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துவதாக அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது எனவும், ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் ‘எஸ்’ ஐ நீக்கி விடலாமே எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Views: - 30

0

0