கட்டாய கொரோனா பரிசோதனையால் கணிசமாக குறைந்த சுற்றுலா பயணிகள் : கொடை வாசிகளின் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 1:02 pm
Kodai Tourists- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில்சுற்றுலா பயணிகள் வருகை குறையத் துவங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்ட ஜூன் மாத முதல் வார இறுதியில் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கட்டுக்கடங்காமல் வரத்துவங்கினர்.

இதனால் சமூக இடைவெளி முற்றிலும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் சவாலாக இருந்தது. அதனை அடுத்து சில வாரங்கள் மாவட்ட நிர்வாகம் கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கி, காவல்துறை, சுற்றுலாத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறையினரை முடுக்கிவிட்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளுக்கு அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும், வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதனை அடுத்து இந்த வார இறுதியில் மலைப்பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பயணிகளே வருகை புரிந்துள்ளனர். மேலும் விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பு உள்ள நிலையில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனவும், அதனால் கொஞ்சம் கொஞ்சமாக 12 மைல் சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களை கொஞ்சம் கொஞ்சமாக திறக்க வேண்டும் என அரசுக்கு உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 272

0

0