இ-பாஸ் தளர்வு : சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.!!

17 August 2020, 12:08 pm
Tollagate Traffic - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : பரனூர் சுங்கச்சாவடியில் இ.பாஸ் தளர்வு காரணமாக அதிகளவில் வாகனங்கள் கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இ பாஸ் தளர்வு காரணமாகவும் இன்று வழக்கத்தை காட்டிலும் கூடுதலான வாகனங்கள் திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வழியாக அதிக வாகனங்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டுள்ளது.

மீண்டும் வேலைக்கு செல்பவர்கள் , வெளியூர் சென்று திரும்புபவர்கள் என அதிக அளவில் சென்னைக்கு நோக்கி மக்கள் செல்வதால் செங்கல்பட்டு சுங்கச்சாவயில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று கொண்டுள்ளதால் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் போக்குவரத்து நெரிசவை சீர்செய்து வருகின்றனர்.

Views: - 20

0

0