SPB காலமானார் – உறுதி செய்த பிரபல இயக்குனர் ! கண்ணீரில் ரசிகர்கள் !
25 September 2020, 1:22 pmகொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
நேற்றைய முன்தினம் மாலை SPB-யின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. அதை பார்த்த கமல்ஹாசன் உடனே மனம் கேட்காமல் மருத்துவமனைக்குச் சென்று SPB யை சந்தித்து பிறகு பத்திரிகையாளர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். எஸ்.பி.பி நலமுடன் இருக்கிறார் என சொல்ல முடியாது, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று மட்டுமே கூற முடியும் என்று அவரது பாணியில் பேசி விட்டுப் போனார்.
இந்த நிலையில், 1:04PM நாள் அளவில், இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் எஸ்பிபி காலமானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள், இப்படி இருக்கக் கூடாது என்று வேண்டி வருகின்றனர்.
அவர் மட்டும் சாகவில்லை அவருடன் இசையும் சேர்ந்து இறந்தது என்று ஆழ்ந்த அனுதாபங்களை Update News 360 சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.