அன்று செல்போன்… இன்று சால்வை… சிரித்த முகத்தோடு பொன்னாடை போர்த்த வந்த முதியவரை நோகடித்த நடிகர் சிவகுமார்…!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 1:51 pm

காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழாவில் முதியவர் ஒருவர் பொன்னாடை அணிவிக்க வந்த போது, அதனை பிடுங்கி வீசிய நடிகர் சிவகுமாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் திடீரென மேடையில் இருந்து பேசும்போது, குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது குறித்து பேசி, பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர், சிவகுமாருக்கு பொன்னாடையை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். அப்பொழுது அதை தடுத்து நிறுத்திய சிவகுமார், பொன்னாடையை பிடுங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த வயதான முதியவர் மனவேதனை அடைந்தார்.

ஏற்கனவே நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை பறித்து வீசியது சர்ச்சையானது. அப்போது, செல்போனின் ஃபிளாஷ் லைட் கண்ணில் பட்டால் என்னாகும் என்று கூறி, தனது தந்தையின் செயலை அவரது மகனும், நடிகருமான கார்த்தி நியாயப்படுத்தி பேசியிருந்தார். தற்போது, சால்வை அணிய வந்தவரை நோகடிக்கும் விதமாக, நடிகர் சிவகுமார் நடந்து கொண்டது நியாயமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!