முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம் : அதிர்ச்சியில் அதிமுக!!

17 September 2020, 5:41 pm
Admk Former MLA - updatenews360
Quick Share

சிவகங்கை : சிவகங்கை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரன் உடல்நலக்குளைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் சந்திரன். இவர் கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமானதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மறைவையொட்டி ஏராளமான அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.