வீட்டை காலி செய்ய உரிமையாளரை வெட்டிக்கொல்ல முயன்ற வாடகைதாரர்… நூலிழையில் உயிர்தப்பிய நபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..

Author: Babu Lakshmanan
28 March 2022, 7:32 pm

காரைக்குடியில் வீட்டில் குடியிருந்த வரை காலி செய்யச் சொன்ன உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சிப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதி செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சரவணன். வீட்டின் மாடியை தேவி என்பவருக்கு மூன்று லட்ச ரூபாய் ஒத்திக்கு விட்டுள்ளார். ஒத்தி காலம் முடிந்ததும் மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்து சரவணன் வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் தேவி வீட்டை காலி செய்ய மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவி தனது உறவினரான குமார் என்பவருக்கு போனில் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த குமார், கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து சரவணனை வெட்ட முயன்றுள்ளார்.

சரவணன் கீழே விழுந்து தப்பித்த நிலையில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்ய முயற்சித்து தப்பியோடிய குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?