விஜய்யுடன் அரசியல் பயணத்தில் இணைய முடிவு? நடிகர் சிவகார்த்திகேயன் பளிச்!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2024, 11:34 am

கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்(தனியார்) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அமரன் திரைப்படத்தின் டீசர் , ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது.

தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர் இராணுவ உடையை கடைசியாக போட்டு விட்டு அதன் நினைவாக உடையை வீட்டு கொண்டு சென்றுவிட்டேன் எனவும் உடையை விட முகுந் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.

அந்த உடையை அணிந்த பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். படபிடிப்பு சீரியசாக இருக்கும் எனவும் ஆனால் நான் கொஞ்சம் ஜாலியா தான் இருப்பேன் என்றார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னாள் முதலில் மன ரீதியாக என்னை தயார் படுத்தி கொண்டேன் பின்னர் உடலை தயார் செய்தேன் என்றார்.

உடல் வலிமை இருந்தால் தான், இந்த படத்தில் நடிக்க சரியாக இருக்கும், எனவே ஜிம் சென்றதில் உடலில் கட்டி கட்டியாக உள்ளது என்றார்.

சினிமாவில் முகுந்த் எங்கு வேலை பார்த்தாரோ அங்கு சென்று தான் சூட்டிங் செய்தோம் எனவும் அங்கு ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது எனவும் கூறினார்.

இதையும் படியுங்க: காரில் குழந்தை கடத்தல்.. சுற்றிவளைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விஜய் டிவியில் இருக்கும் போதே சாய் பல்லவியை தெரியும் ஆனால் படத்தின் போதுதான் மிகவும் நன்றாக தெரியும் சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது ஆனால் இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்க வில்லை என்றார்.

முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள், அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு? சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது அதைப்பற்றி பின்னர் பார்ப்போம் என்றார்.

மாணவர்கள் நிகழ்ச்சியின் போது உங்களை பார்த்து துப்பாக்கி போன்று சிம்பல் காண்பித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு , கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன்.

அதை தான் தனது கைகளை உயர்த்தி,மாணவர்கள் என்னிடம் காண்பித்து கேட்டார்கள் என்றார்.மேலும் படத்தை பார்த்து விட்டு மக்களின் ரிவ்யூ செய்தியாளர்களின் ரிவ்யூக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!