மீண்டும் உடல்நலக்குறைவு… சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 3:21 pm
Shivashankar Baba-Updatenews360
Quick Share

சென்னை : பாலியல் தொல்லை புகாரில் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தலைமறைவானதையடுத்து உத்தரகாண்டில் இருந்து டெல்லி சென்ற போது கைது செய்யப்பட்டார்.

பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமடைந்து பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கட்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Views: - 177

0

0