விடாப்பிடியாக ஜாமீன் கேட்கும் சிவசங்கர் பாபா : மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 11:04 am
Shivashankar - Updatenews360
Quick Share

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து ஜாமீன் கோரியிருந்தார் இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லியில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீனு மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றமும், மாவட்ட முதன்மை நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 132

0

0