பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பு: அரசியல் கட்சியினர் சாலை மறியல்…

17 July 2020, 10:27 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதையறிந்த பெரியாரிய அமைப்பினர், பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெரியார் அமைப்பினர், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.பெரியார் சிலை அவமரியாதை குறித்து, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.