சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

Author: Babu Lakshmanan
29 September 2021, 6:41 pm
Smart chennai -updatenews360
Quick Share

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த சென்னை 2.0 என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், பழமையான கட்டிடங்கள், நகர்புற நில மேம்பாடு, உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 248

0

0