‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020’: கோவை மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

1 August 2020, 7:25 pm
Cbe Modi Wish - Updatenews360
Quick Share

கோவை : ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 என்ற மென் பொருள் உருவாக்கும் போட்டி துவங்கியுள்ள சூழலில் கோவையில் மாணவர்களுடன் காணொளி காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காவல் நிலையங்களுக்கு உதவும் வகையில் மென் பொருள் தயாரித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020’ போட்டி இன்று துவங்கியது. இதில் நாடு முழுவதிலு இருந்தும் 164 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 27 மாணவர்கள் குழுக்கள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று காலை கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கான மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதன்மை கண்டுபிடிப்புகளுக்கான அலுவலர் அபய் ஜேரே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த சூழலில், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இதில், தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தயாரிப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினர்.

கோவையில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பிரதமரிடம் உரையாற்றினர். அப்போது வணக்கம் என்று கூறி மாணவர்களிடம் பிரதமர் பேசினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் தாங்கள் தயாரித்த காவல் நிலையங்களுக்கு உதவு வகையில் ஆர்டிபீசியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence) பற்றி கூறினர். இதனை கேட்ட பிரதமர் மோடி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Views: - 0

0

0