இங்கயும் வந்துருச்சா இந்தி……குழப்பத்தில் மக்கள்!!!

Author: Aarthi
4 October 2020, 6:11 pm
irctc booking online - updatenews360
Quick Share

சென்னை: சிறப்பு ரயிலுக்கான முன்பதிவில் பயணிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி இந்தியில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மேலும் 7 சிறப்பு ரயில்கள் கடந்த 2ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கடந்த 2ம் தேதி காலை 8 மணி முதல் துவங்கியது. இதில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதற்காக குறுஞ்செய்தி செல்போனுக்கு அனுப்பப்படும்.

அந்த குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில்தான் வரும். ஆனால் தற்போது புறப்படும் இடம் சேரும் இடம் மற்றும் பெயர் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. மற்ற எழுத்துக்கள் அனைத்தும் இந்தியில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறுஞ்செய்தி இந்தியில் உள்ளதால் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா, இல்லையா என அறிந்து கொள்வதில் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே ‘ரயில்வே நிர்வாகம் முன்பு போலவே ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 51

0

0