சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு தங்கம் கடத்தல் : விமான நிலையத்தில் காத்திருந்த ஷாக்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 11:29 am

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் மூன்று பயணிகளிடம் இருந்து ரூபாய் 2.47 கோடி மதிப்பிலான 4.17 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது 3 பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து ரூபாய் 2.47 கோடி மதிப்பிலான 4.1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதை அடுத்து சென்னையில் சேர்ந்த ஜாபர் அலி, சாகுல் ஹமீத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…