பைக்கில் படுத்துறங்கிய பாம்பு : 2 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2022, 3:53 pm
Bike Snake -Updatenews360
Quick Share

விழுப்புரம் : இருசக்கரவாகனத்தில் சாரைப்பாம்பு இருந்ததால் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி 2 அடி சாரைப் பாம்பை பிடித்தனர்.

விழுப்புரம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்கம்பெட்டை கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் இன்று நேரு விதியில் உள்ள வீட்டுக்கு சில பொருட்கள் வாங்க வந்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பின் தலை வெளியே தெரிந்தது.

அதனை பார்த்த முத்து சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்தி கூச்சலிட்டார் அப்போது பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரண்டு அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

நடுரோட்டில் இருசக்கர வாகனம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பாம்பை பிடித்து தீயணைப்புத்துறையினர் வனச்சரகத்தில் விட்டனர்.

Views: - 134

0

0