கருநாகத்தை முகத்தில் தேய்த்து சிகிச்சை : பணம் வசூலிக்கும் பாம்பாட்டிகள்!!

13 November 2020, 9:47 am
Pondy Snake - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கருவளையத்திற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பாம்பாட்டி ஒருவர் நல்ல பாம்பை முகத்தில் வைத்து தேய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாம்பாட்டி குமரேசன். இவர் புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பாம்பைக்கொண்டு முகத்தில் உள்ள கருவலையம், பரு, தேமல் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதற்கு 100 ரூபாய் கட்ணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி அப்பகுதியில் உள்ள சிலர் அவரிடம் சென்றுள்ளனர். அப்போது பாம்பாட்டி குமரேசன் கொடிய விஷமுள்ள நல்லபாம்பை அவர்களின் முகத்தில் வைத்து தேய்த்துள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 21

0

0