அப்போ நாங்க மட்டும் இளிச்சவாயனுகளா? பிரச்சாரத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 8:04 pm

அப்போ நாங்க மட்டும் இளிச்சவாயனுகளா? பிரச்சாரத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் திமுக அரசு ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தென்காசி பகுதி, பூலாங்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: அரைத்த மாவையே அரைக்கும் உதயநிதி : பேச விஷயம் இல்லாமல் பிரச்சாரத்தில் திணறும் திமுக!!

அப்போது மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் பற்றி கலகலப்பாக மக்களிடத்தில் எடுத்துக்கூறினார். அமைச்சர் பேசுகையில், நம்ம (ஆண்கள்) பஸ்ல போன காசு கொடுக்கணும். அவங்க (மகளிர்) போன காசு கொடுக்க வேண்டாம். அப்போ நாங்க எல்லாம் என்ன இளிச்சவாயனுகளா என மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து கலகலப்பாக பேசினார்.

மேலும் , மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்ள் குறித்தும் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!