வேலூரில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு : 6 வருடத்திற்கு பிறகு 4 பேர் கைது!!

Author: Udayachandran
14 October 2020, 3:14 pm
Muder 4 Arrest - Updatenews360
Quick Share

வேலூர் : 2014 ஆண்டு சமூக ஆர்வலர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்து சி.பி.சி.ஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் மாதனூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் ஓய்வு பெற்ற ஆசிரியரும் , சமூக ஆர்வலருமான இவர் கடந்த 2014ஆம் ஆண் நவம்பவர் 11ம்தேதியன்று மாதனூர் பகுதியிலிருந்து இரவு நேரத்தில் சைக்கிளில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மநபர்களால் வழிமறித்து அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் கொலை வழக்கில் தேமுதிக கட்சி பிரமுகர் லோகாநாதன் ஒருவரை மட்டும் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கானது திருப்பத்தூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் திருப்தி இல்லை என கொலையான தணிகாசலத்தின் சகோதரர் சுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீது கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததின் பேரில் வேலூர் குற்றபிரிவு குற்ற புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆனால் அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த வழக்கு நிலுவையில் போடப்பட்டது

தற்போது இந்த வழக்கின் மீது வேலூர் சிபிசிஐடி போலீசார் கொலை நடந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கினர். இதில் 9 பேரை அழைத்து சென்று டி.எஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பாலூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 28), கார்த்திக் (வயது 30), ஜெகதீஷ் மற்றும் சாம்பசிவராவ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களை வேலூர் அண்ணாசாலையில் உள்ள நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி இவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக ஆர்வலர் தணிகாசலம் மணல்கொள்ளை, முரம்பு மண் திருட்டு, ஏரி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு எதிராக அவர் புகார்களை அனுப்பி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்று தந்தார்.

இவர் கொலையில் அப்போது உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என அப்போது அரசியல் கட்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். நியாயம் வேண்டி அவர்கள் வழக்கு தொடர்ந்ததால் 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட உண்மையான குற்றவாளிகள் 2020 அக்டோபர் 13 ஆம் தேதி தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 47

0

0