சமூக செயற்பாட்டாளர் முகிலன் குண்டுக்கட்டாக கைது : 7 பேரை விடுதலை செய்ய கோரி நூதன போராட்டம்!!
20 January 2021, 6:39 pmமதுரை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட் சமூக செயற்பாட்டளார் முகிலனை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய கோரி மதுரை மத்திய சிறை முன்பாக முகிலன் தலைமையில் ஏழு புறாக்களை பறக்கவிட்டு 7 தமிழர் விடுதலை கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டதையடுத்து முகிலன் கைதாக மாட்டோம் என்று மத்திய சிறை முன்பு தரையில் அமர்ந்து போராட தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முகிலன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு காவலர்கள் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
0
0