இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்: 2 பேருக்கு வலைவீச்சு..திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
10 March 2022, 4:07 pm

திருவள்ளூர்: இரை தேடி இனப்பெருக்கம் செய்ய பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்த 28 அரிய வகை வெளிநாட்டு பறவைகளை விஷம் வைத்துக் கொன்ற சமூக விரோதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கம், புட்லூர் ஏரி, கடம்பத்தூர் ஏரி, கூவம் ஆறு உள்ளிட்ட முக்கிய நிலைகளில் விஷம் வைத்து கொல்லப்பட்ட வெளிநாட்டு பறவைகள் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் வனத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் இருபத்தி எட்டு வெளிநாட்டு பறவைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார், வனவர்கள் உமாசங்கர், ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் கோபி ஆகியோர் பறிமுதல் செய்த இறந்த நிலையில் இருந்த பறவைகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டில் இருந்து இரை தேடியும் இனப்பெருக்கம் செய்யவும் வந்த அரிய வகை ரஷ்யா சைபீரியா பறவைகள் விஷம் வைத்து உள்ளதால் அதனை வாங்கி உண்ண வேண்டாம் என்றும் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நார்தன் பின்டைல் காட்டன் பிக்னிக் கூஸ் என்ற வெளிநாட்டுப் பறவைகளை திருவள்ளூர் கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நரிக்குறவர்கள் சங்கர், சக்கரவர்த்தி உள்ளிட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!