சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா: மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு..!!

Author: Rajesh
13 March 2022, 6:03 pm

கோவையில் ஓ.பி.சி.கூட்டமைப்பு, அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழக முதல்வரின் 69 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,ஓ.பி.சி.கூட்டமைப்பு,அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா டவுன் ஹால் பகுதியில் உள்ள க்ரீன் ஓட்டல் வளாக அரங்கில் நடைபெற்றது.

ஓ.பி.சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.முகம்மது ரபீக் ஒருங்கிணைத்த விழாவில்,பெண் தொழில் முனைவோர் தலைமை பயிற்சியாளர்கள் சபுரா,மரகதம்,ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பி.சி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கோவை பாபு,எம்.பி.சி கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் ராம வெங்கடேசன்,ஓ.பி.சி.கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் சூலூர் சந்திரசேகரன் தங்கப்பழம் வழக்கறிஞர் வெண்மணி, மதிவாணன், ரவிக்குமார், கா.சு. நாகராசன், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கரிகாலன், ஜான் வில்லியம்ஸ், லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் விதமாக நடைபெற்ற இதில், உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த 45 பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து வருமானத்தில் பின் தங்கிய மூன்று பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் பேசுகையில்,பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கி சுய தொழிலில் முன்னனி நிறுவனங்களுக்கும் சவால் விடும் வகையில்,பெண்களை உருவாக்கி வருவதாகவும்,தற்போது அனைத்து மாவட்டங்களில் இவ்வாறான சுய தொழில் முனைவோர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, தனி சொசைட்டி வாயிலாக அரசே கொள்முதல் செய்து,நேரடி விற்பனை நிலையங்களை உருவாக்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் அறிமுகப்படுத்திய மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுயதொழில் முனைவோரான பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?