காற்றில் சரிந்து விழும் சோலார் மின் கம்பங்கள் : நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 4:43 pm

கோவை உக்கடம் பகுதியில் காற்றில் சரிந்து விழுந்த சோலார் மின் கம்பங்களை சீர் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை உக்கடம் வாலாங்குளம் கரைகளை பலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக குளத்தின் கரையில் போக்குவரத்திற்காக ஒரு வழிச்சாலை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகள் அனைத்தும் அழகு ததும்பும் விதத்தில் நவீன சோலார் மின்விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று குளக்கரைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துமழையில் நனைந்து வருகிறது.

கீழே விழுந்த சோலார் மின் கம்பங்கள் பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் மின் கம்பங்கள் பொருத்தும் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!