குடும்பம் கெட்டதே உன்னால் தான்.. சதக்.. சதக்.. தந்தையை அரிவாளால் தாக்கி கொலை செய்த மகன் கைது.!!

6 March 2021, 8:55 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே கெங்குவார் பட்டியில் தந்தையை அரிவாளால் தாக்கி கொலை செய்த மகன் கைது காவல்துறையினர் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டிபஜனை மடத்தருவை சேர்ந்த
ஐயாதுறை வயது 70 என்பவர் அவர் நேற்று இரவு வீட்டில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இத்தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்
பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஐயாதுரை மரணத்தில் சந்தேகம் கொண்ட அவரது சகோதரர் ரவிசந்திரன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் இறப்பில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பல்வே கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஐயாதுறையுடன் வசித்து வந்த அவரது மகன் ஜெயக்குமார் தலைமறைவானது தெரிய வந்தது இந்நிலையில் காவல்துறையினர் ஜெயக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்,

பொது ஜெயக்குமார் தலைமறைவாக இருந்த இடத்திலிருந்து காவல்துறையினர் கைது செய்தனர் இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் தனது மனைவி காயத்ரியை பிரிந்து 5 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் ஏற்கனவே தனது மனைவிக்கும் தனது தந்தைக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறி சந்தேகம் அடைந்து பிரிந்திருந்த வாழ்ந்து வருவதாகவும் ஜெயகுமார் நேற்று இரவு மதுபோதையில் வந்து தனது தந்தை ஐய்யாதுரையிடம் தன்னுடைய குடும்பம் கெட்டதே உன்னால் தான் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த ‘ அரிவாளை எடுது சரமாரி தாக்கியதில் ஐயாத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் உயிரிழந்ததை அறிந்துகொண்ட ஜெயக்குமார் தலைமறை வாகியுள்ளார்.

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி என தெரியவரவே தேவதானப்பட்டி காவல்துறையினர் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் தந்தையை மகன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 26

0

0