இது TET இல்ல… நீட்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, மன்னிச்சிடுங்க : தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து மகன் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 1:25 pm
Neet Exam Suicide - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்தவர் கோபி (வயது 54). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோகனசுந்தரி, (வயது 45). இவர்களுக்கு முரளிகிருஷ்ணன் (வயது 19), உட்பட இரு மகன்கள் இருந்தனர்.

முரளிகிருஷ்ணா பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 160 மதிப்பெண்கள் எடுத்து தோல்வியடைந்தார். இதையடுத்து மீண்டும் இம்முறை நடைபெறும் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தார்.

இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலமாக படித்து வந்தார். வரும், 17ல், நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் வந்தது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முரளிகிருஷ்ணன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு டைரியில் தன் பெற்றோருக்கு எழுதி வைத்துள்ளதை சிப்காட் போலீசார் கைப்பற்றிஉள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில், நீட் தேர்வு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னால நீங்க நினைக்கிற அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியல. TET தேர்வுனு உங்க கிட்ட பொய் சொல்லி கஷ்டப்படுத்திட்டேன், இது TET இல்ல.. என்ன மன்னிச்சிருங்க என உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

கடந்தாண்டை போலவே, நீட் தேர்வில் மீண்டும் மதிப்பெண் குறைந்து தோல்வியடைந்து விடுவோமோ என்ற மன அழுத்தத்தில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Views: - 703

1

0