அடிமடியில் கை வைத்த வீட்டோட மாப்பிள்ளை : கைவரிசை காட்டியதால் கம்பி எண்ணும் மருமகன்!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2024, 12:07 pm

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரோடு அவரது மகள் ராதிகா – திருவள்ளூரை சேர்ந்த மருமகன் சாம் ஜெபதுரை ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகள் மற்றும் தந்தை சென்னையில் திருமணத்திற்க்காக சென்று திரும்பி வந்து பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 57 சவரன் தங்க நகைகளய் திருடி போயுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Son in Law Arrest After theft in Father in law home

விசாரணையில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமனின் மருமகன் சாம் ஜெபதுரை, திருவள்ளூரை சேர்ந்த அவரது கூட்டாளி உசேன் என்பவனுடன் சேர்ந்து மாமனாரது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

இதனை எடுத்து தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த மருமகன் சாம் ஜெபதுரை அவனது கூட்டாளி உசேன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Theft Accused arrest

மேலும் இவர்கள் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!