மறைந்த தந்தையின் மெழுகுசிலையை உருவாக்கி தனது திருமணத்தில் பங்கேற்க வைத்த பாச மகனின் நெகிழ வைக்கும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 4:20 pm

விழுப்புரம் ; உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமணத்தில் பங்கேற்க வைத்த பாச மகனின் செயல் பார்ப்போரை‌ நெகிழச் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசனின் தந்தை சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்தநிலையில், அன்பரசனுக்கும் சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தனக்காக சிறு வயது முதல் உழைத்து வந்த தனது தந்தை தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காவலர் அன்பரசன் எண்ணினார். இதற்காக அவரது தந்தையை மெழுகு சிலையாக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

பின்னர், தனது திருமணத்தில் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் தனது தந்தையை பங்கேற்க செய்தது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், திருமண ஊர்வலத்தின் போதும் தனது தந்தை உடன் இருப்பதைப் போல கொள்வது போல் அருகில் வைத்துக் கொண்டு வந்தது பார்ப்போரை‌ நெகிழ செய்துள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!