நள்ளிரவில் தந்தை செய்த காரியத்தை பார்த்து ஷாக் ஆன மகன்… அதிகாலை மகனுக்கு நேர்ந்த துயரம் : தாய் சொன்ன வார்த்தையால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 4:29 pm
Thirukovilur Suicide -Updatenews360
Quick Share

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை தந்தை இறந்த சோகத்தில் மூன்றாவது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அர்ஜுனன் (வயது 55). இவரது மனைவி சரசு (வயது 50). இந்த தம்பதிகளுக்கு அனிதா என்ற மகளும் பாலாஜி,மற்றும் உதயகுமார் ( 25)என்ற 2 மகன் உள்ளனர்.

இந்நிலையில் அர்ஜுனன் குடித்துவிட்டு வருவதால் அவரது மனைவி சரசு ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவில் குடித்துவிட்டு வந்த அர்ஜுனனை அவரது மனைவி சரசு திட்டி உள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் சென்று அர்ஜுனன் வீட்டின் பின் பக்கம் உள்ள பூசமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மூன்றாவது மகன் உதயகுமார் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அதிகாலையில் அவரது விவசாய நிலத்தில் சென்று பூசமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை இறந்த சோகத்தில் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் இறந்த உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Views: - 132

0

0