மகனின் மருந்து பணம்.. ரூ.500ஐ பறித்த போலீஸ்.! முதல்வருக்கு ட்வீட்.. நடந்த அதிசயம்!!

16 May 2021, 11:11 am
CM Helps Twitter- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மகனுக்கு மருந்து வாங்க சென்றவரை அபராதம் விதித்து 500 ரூபாயை போலீசார் பறித்த நிலையில் டேக் செய்து முதலமைச்சருக்கு டீவிட் செய்த அடுத்த நிமிடத்தில் நடந்த அதிசயம் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு..

கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அவசியம் இன்றி வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் பலர் முககவசம் அணியாமல் சுற்ற தொடங்கினர். இதையடுத்து நேற்று முதல் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். பலரிடமும் அபராதம் வசூலிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் திருவள்ளூரில் மனநலம் பாதித்த மகனுக்கு மருந்து வாங்க 500 ரூபாயை கொண்டு சென்ற பாலாஜி என்பவரிடம், போலீசார் வெளியில் சுற்றியதாக அபராதம் விதித்து 500 ரூபாயை பறித்தனர்.

மனம் நொந்து போன பாலாஜி, வேதனையுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை (cmotamilnadu) என டிவிட்டரில் டேக் செய்து பதிவிட்டார். இதைப் பார்த்த முதலமைச்சர் உடனே அவர்களுக்கு உதவி செய்ய உத்தரவிட்டார்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் வீடு தேடி வந்து மருந்தையும் பணத்தையும் போலீசார் கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்டு சென்றனர். இதையடுத்து அவர் காவல்துறைக்கும், தமிழக அரசுககும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அபராதத் தொகையாக 500 வசூலித்த சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் காவல் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி அவர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் பலர் தங்கள் தேவைகளுக்காக அவசரம், மருந்து வாங்க செல்வதாக கூறி வெளியில் செல்வதனால் உண்மையாக மருந்து வாங்க செல்பவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர் என்பது இது போன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கிறது.

Views: - 240

0

0