சிகரம் தொடும் ‘சூரரைப் போற்று’: மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற்று சாதனை….!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 4:10 pm
Quick Share

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிப்பு

சிறந்த படத்திற்கான விருது மற்றும் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிப்பு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இரண்டு விருதுகளைக் குவித்துள்ளது.

கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா.

இந்தியா முழுக்கவே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினரும் சூரரைப் போற்று படத்தை பாராட்டினார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் போட்டியிட்டது. தற்போது, கொரோனா ஊரடங்குகள் இருப்பதால், ஆஸ்திரேலியாவிருந்து ஆன்லைன் மூலமே இந்த விருது விழா நடைபெற்றது.

இதில், சூரரைப் போற்று படம் மட்டுமல்லாமல், சமீபத்தில் கவனம் ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன், ஷெர்னி உள்ளிட்டப் படங்களும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சூரரைப் போற்று சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இந்த விழாவில், ஆன்லைன் மூலம் சூர்யா கலந்துகொண்டு சூரரைப் போற்று படத்திற்காக எனக்கு கிடைத்த முதல் விருது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது ஷெர்னி படத்துக்காக நடிகை வித்யா பாலனுக்கு கிடைத்திருக்கிறது.

Views: - 453

2

0