கனமழையால் நிரம்பியது சோத்துப்பாறை அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

4 May 2021, 6:44 pm
Sothuparai Dam Full -Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பியதால் வராகநதி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ள அணைதான் சோத்துப்பாறை அணை. இந்த அணையானது தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாம் மிக உயரமான அணையாகும்.

இயற்கைகளின் நடுவே அமைந்துள்ள சோத்துப்பாறை அணைக்கு தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் பெய்யும் மழை நீர் சோத்துப்பாறை அணையில் தேக்கப்படுகின்றது.

இதனால் தற்போது பெரியகுளம் சோத்துபாறை அணை நேற்று இரவு 10.30 மணிக்கு அதன் முழு உயரம் 126.28 அடியை நீர் மட்டம் எட்டியது. அணை நிரம்பியதால் வினாடிக்கு அணைக்கு நீர்வரத்து 34 கன அடி நீர் வெளியேற்றம் 34 கன அடியாக உள்ளது.

இதனால் பெரியகுளம் வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்பும் உள்ளிட்ட வராகநதி கரையோர கிராம மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி அறிவித்துள்ளார்.

மேலும் சோத்துப்பாறை அணையில் தேக்கப்படும் நீரானது பெரியகுளம் மட்டுமின்றி பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நாளொன்றிற்கு 3 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் இந்த நீர் குடிநீர் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது மேலும் விவசாயத்திற்கு போக மிஞ்சிய மீதமுள்ள நீர் வராகநதி ஆற்றில் பயணித்து வைகை ஆற்றை சென்றடைகிறது.

மேலும் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களா வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து அணைகள் குளங்கள் கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Views: - 78

0

0