இறைச்சி கடையில் கோழிகளை அமுக்கும் ‘சூப் பாய்ஸ்‘ : சிசிடிவி காட்சியில் சிக்கிய கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 4:50 pm
Cock Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : கோழி இறைச்சி கடையில், மர்மநபர்கள் கோழியை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் ஏபிடி சாலையை சேர்ந்தவர் கார்த்திகைசாமி. கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் விற்பனைக்காக வைக்கப்படும் நாட்டு கோழிகள் அடிக்கடி திருடு போயுள்ளது. இது தொடர்பாக கார்த்திகைசாமி தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் நாட்டு கோழிகள் அதிகளவில் திருட்டு போவதால் இது தொடர்பாக மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேசமயம் கோழித் திருடர்களை பிடிப்பதற்காக, கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி தேடி வந்துள்ளார்.

கடையில் கேமரா பொருத்தியிருந்ததை அறிந்த அந்த கும்பல், மின் தடை மற்றும் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் கோழிகளை திருடி உள்ளனர். இதனால் அவரது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் கடைக்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், நாட்டுக்கோழியை திருடிச் சென்றது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, மர்மநபர்களை துரத்தி சென்ற கார்த்திகைசாமி, மர்மநபர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, திருப்பூர் மத்திய போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 669

0

0