அரசு ஊழியர்களுக்காக புறநகர் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

2 October 2020, 4:05 pm
southern railway - updatenews360
Quick Share

அக்டோபர் 5ம் தேதி முதல் புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்காக அக்டோபர் 5ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்தியாவசிய பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Views: - 39

0

0