“எஸ்.பி.பி” குணம்பெற சபரிமலை கோயிலில் பிரத்தியேக சிறப்பு பிரார்த்தனை..!

21 August 2020, 11:31 am
Quick Share

கேரளாவில் பாடகர் எஸ்பி.பி குணம் பெற வேண்டி கச்சேரி மேளம் முளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆனால் கொரோனா வீரியம் அதிகம் ஆனதால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சினிமா பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்தை மிஞ்சிய இறை ஆசியால் எஸ்.பி.பி மீண்டு வருவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மட்டும் இன்றி இன்று நேற்று மாலை 6 மணிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

அந்த வகையில், உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் மனதில் வாழும் எஸ்.பி.பி.க்காக கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அம்மாநிலத்தின் கச்சேரி மேள கலைஞர்கள் இசையை ஒலிக்க செய்ய பூஜை நடைபெற்றது.

Views: - 34

0

0