பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் – எஸ்.பி.சரண் ட்வீட்..!

2 September 2020, 3:38 pm
Quick Share

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5- ஆம் தேதி சென்னை தானியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றன். சமீபத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரபலங்கள் மற்றும் உலக அளவில் உள்ள எஸ்.பி.பி ரசிகர்கள் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வரும் சூழலில், அவரது மகன் எஸ்.பி சரண் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தகவல் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று எஸ்.பி.சரண் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுயநினைவுடன் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

Views: - 11

0

0