எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!

19 August 2020, 6:04 pm
Quick Share

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொரோனா தொற்று நோய் சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளிட்டோரின் உயிருக்கு கடும் சவால் விடும் விதமாக உள்ளது.

இதற்கு தடுப்பூசி கண்டு பிடித்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த சூழலில், கொரோனா தொற்றால் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கொரோனா வீரியம் அதிகம் ஆனதால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அவர் மீண்டுவர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் நாளை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி-யின் பாடலை ஒலிக்கவிட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யவுள்ளனர். இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சினிமா பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்தை மிஞ்சிய இறை ஆசியால் எஸ்.பி.பி மீண்டு வருவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 0 View

0

0