சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இன்று முடிவு..!
8 September 2020, 10:34 amசென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
பேரவை விதிகள்படி ஆண்டுக்கு 2 முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கையும், மே, ஜூன் மாதங்களில் மானிய கோரிக்கை விவாதமும் நடத்தப்படும். இந்த ஆண்டு மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ல் ஆரம்பித்து ஏப். 9 வரை நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 24-ம் தேதிக்குள் அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.
6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டும் என்பதால், செப். 24க்குள் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருந்தது வந்தது. அதன்படி, கூட்டத்தை தொடரை 4 நாட்களுக்கு நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி, வரும் 14ம் தேதி கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, வழக்கமாக நடக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் இந்த முறை கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
0
0