ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் வசூல்..!

Author: kavin kumar
23 February 2022, 7:58 pm
Quick Share

திருச்சி : ஸ்ரீரங்கம் கோவிலில் டிசம்பர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.89 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 165 கிராம் தங்கம், 1164 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலாமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்வர். மேலும், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றையும், உண்டியல் காணிக்கையும் செலுத்துவர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் கருட மண்டபத்தில் நடைபெற்றது.காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர். அதில் 89 லட்சத்து 13ஆயிரத்து 913 ரூபாய் பணமும், 165 கிராம் தங்கமும், 1164 கிராம் வெள்ளியும், 149 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

Views: - 407

0

0