ஓய்வுக்கா? ஆய்வுக்கா? கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு வந்த ஸ்டாலின்!!

16 April 2021, 3:38 pm
Kodaikanal Stalin -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் முடிவடைந்த‌ நிலையில் ஓய்வுக்காக‌ கொடைக்கான‌லுக்கு திமுக‌ த‌லைவ‌ர் ஸ்டாலின் குடும்ப‌த்துட‌ன் வ‌ருகை புரிந்துள்ளார்.

த‌மிழ‌க ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் க‌ட‌ந்த‌ ஏப்ர‌ல் 6ஆம் தேதி ஓரே க‌ட்ட‌மாக‌ ந‌டைபெற்ற‌து. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி ந‌டைபெற‌ உள்ள‌து. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.

தேர்த‌ல் பிர‌ச்சார‌ங்க‌ளில் அர‌சிய‌ல் க‌ட்சியின‌ர் தீவிர‌ வாக்கு சேக‌ரிப்பில் ஈடுப‌ட்டு வேட்பாளர்களுக்காக சுற்று ப‌ய‌ண‌மும் மேற்கொண்ட‌ன‌ர்.

இத‌னை தொட‌ர்ந்து ஓய்வுக்காக‌ கொடைக்கான‌லுக்கு குடும்ப‌த்துட‌ன் திமுக‌ த‌லைவ‌ர் ஸ்டாலின் வ‌ருகை புரிந்துள்ளார். த‌னியார் த‌ங்கும் சொகுசு விடுதியில் த‌ங்கி உள்ளார். தொட‌ர்ந்து தீவிர‌ போலீஸ் பாதுகாப்பும் போட‌ப்ப‌ட்டுள்ள‌து.

சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக மலைப்பிரதேசமான கொடைக்கானலுக்கு வந்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தேர்தல் முடிவு நாள் நெருங்கி வரும் நிலையில் ஓய்வுக்காக அவர் வரவில்லை தேர்தல் முடிவுகளை அங்கிருந்தே ஆய்வு செய்வதாக திமுகவினர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

Views: - 60

0

0