ED ரெய்டு பயத்தால் பழிவாங்கும் ஸ்டாலின்.. அதிமுகவை அசைக்க கூட முடியாது : இபிஎஸ் கடும் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2025, 4:15 pm

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பக்கத்தில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்க: பீர் பாட்டில் வைத்து திமுக கூட்டம்.. அதிமுக கூட்டம் அப்படியல்ல : செல்லூர் ராஜூ நறுக்!

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் திரு. ஸ்டாலினுக்கு
பயத்தை உருவாக்கியிருக்கிறது, பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.

EPS

டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து திரு. ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அஇஅதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!