கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டி? இன்று விருப்ப மனு தாக்கல்!!!

25 February 2021, 9:11 am
Stalin Kolathur - Updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியயில் போட்டியிட இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு சில கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணியை துவங்கியுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக சார்பாக விருப்பமனுக்கள் கடந்த 17ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான திமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

எ.வ வேலுஇ கவிஞர் சல்மா, ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விருப்பமனு பெறுவதற்கான கடைசி நாள் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காட்பாடியில் போட்டியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் இன்று தனது விருப்ப மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 8

0

0