திமுக கொடியில் ஸ்டாலின் உருவப்படம் வரைந்த ஓவிய ஆசிரியர் : குவியும் பாராட்டு!!

7 May 2021, 10:30 am
Stalin drawing- Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : தமிழக முதல்வராகும் ஸ்டாலின் அவர்களுக்கு திமுக கொடிக்கம்பத்தால் ஸ்டாலின் படம் வரைந்த ஆசிரியர் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் உருவத்தை வரைந்துள்ளார்.

அவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக தமிழக முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திமுக கொடிக்கம்பத்தால் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.

ஓவியாசிரியர் செல்வம் வரைந்த ஸ்டாலின் ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Views: - 83

0

0