கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டி : விண்ணப்பிக்க பிப்.,12 கடைசி நாள்..!!

5 February 2021, 7:14 pm
Coimbatore nehru stadium - updatenews360
Quick Share

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிக்கு 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டிகள், வரும் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது.

மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு மற்றும் கோயம்புத்தூர் பஸ் நிலையம், இரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் இருந்து போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா விளையாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பிடித்தாலும், தேசிய அளவிலான தடகள போட்டிக்கு (PCI) Minimum Qualified Standard தகுதி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு மட்டும் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டையினை அவசியம் கொண்டு வர வேண்டும். எனவே, இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 12.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம் :

தடகள விளையாட்டு போட்டி

J.ரஞ்சித்குமார் – 7904368119
S.N.உதயகுமார் – 9841549192
G.விஜயசாரதி – 7299306761

நீச்சல் விளையாட்டு போட்டி

M.விஜயகுமார் – 9994944166
R.வேல்முருகன் – 9843336485
S.ரவிராஜன் – 8754575863

A.கண்ணியப்பன் – 9994555486/ வெங்கடேஷ் / 7358300777, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Views: - 23

0

0