“கண் திறந்து பார்த்த முருகன் சிலை“ : அபூர்வத்தைக் காண குவிந்த பக்தர்கள் !!

Author: Udayachandran
8 October 2020, 6:58 pm
Lord Murugan- Updatenews360
Quick Share

கோவை : பிரபல முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ஏராளமான மக்கள் வியப்புடன் தரிசனம்.

கோவை மசகளிப்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன் மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் கோவில் நடை திறந்த உடன் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த முருகன், கண்களை சுற்றி வெள்ளை நிறத்திலும் நடுப்பகுதியில் கருப்பு நிறத்துடன் கண் திறந்த வண்ணம் காணப்பட்டது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் வியப்புடனும் ஆச்சியத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து அக்கோவிலின் பூசாரி கூறுகையில் இந்த முருகன் கோவில் 60வருடமாக இங்கு இருப்பதாகவும்,வழக்கம்போல் புரட்டாசி மாதத்தை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு வருகிறோம், அதே போல் இரண்டு நாட்கள் முன் மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு இன்று காலை நடையை திறந்தவுடன் கண் திறந்து காணப்பட்டது. இதை அறிந்து சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் தரிசனம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Views: - 130

0

0